தினசரி மன்னா
அந்த காரியங்களை செயல்படுத்துங்கள்
Friday, 28th of June 2024
0
0
387
Categories :
வார்த்தையை ஒப்புக்கொள்வது ( Confessing the word)
ஆதியாகமம் அனைத்து தொடக்கங்களின் புத்தகம். நீங்கள் திருமணத்தையும் செல்வத்தையும் புரிந்து கொள்ள விரும்பினால், நீங்கள் ஆதியாகமம் புத்தகத்திற்கு செல்ல வேண்டும். நீங்கள் வெளிப்படுத்துதல் புத்தகத்தைப் புரிந்துகொள்ள விரும்பினால், நீங்கள் ஆதியாகமம் புத்தகத்திற்குச் செல்ல வேண்டும். நீங்கள் ஆதியாகமத்தை புரிந்து கொள்ளவில்லை என்றால், நீங்கள் வாழ்க்கையையே புரிந்து கொள்ள மாட்டீர்கள்.
”ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார். தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார். வெளிச்சம் உண்டாயிற்று.“
ஆதியாகமம் 1:1-3
ஒருவேளை உங்கள் வாழ்க்கை, உங்கள் வணிகம், உங்கள் தொழில் வெறுமையும் வெற்றிடமாய் இருக்கலாம். நீங்கள் காண்பதெல்லாம் இருள் மற்றும் நம்பிக்கையிண்மை. பிசாசு ஒரு பொய்யன். தேவன் உங்களைக் கைவிட்டுவிட்டார், உங்களுக்கு நல்லது எதுவும் நடக்காது என்று அவன் கூறுகிறான். ஆனால், ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்த ஒன்றின் மீது தேவ ஆவி அசைவாடிக்கொண்டிருந்தார் என்பதை கவனியுங்கள். தேவன் எங்கும் எப்போதும் இருக்கும் தேவன். அவர் உங்களை கைவிட மாட்டார்.
ஆனால், உங்கள் வாழ்க்கையில் சில விஷயங்களைச் செயல்படுத்தினால் ஒழிய அந்த இருள் விலகாது. என்னை விவரிக்க அனுமதியுங்கள்.
ஒழுங்கின்மையும் வெறுமையின்மீது அசைவடின தேவ ஆவியானவர் எதையும் மாற்றவில்லை. தேவனுடைய வார்த்தை பேசப்படும் வரை உண்மையில் எதுவும் நடக்கவில்லை. அப்போது தேவன், “வெளிச்சம் உண்டாகக்கடவது” என்றார்.
வாழ்க்கை வெளிப்படுவதற்கு முன் வார்த்தை பேசப்பட வேண்டும். தேவன் வெளிப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்பும் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதிக்கும் இதே கொள்கை பொருந்தும். உங்கள் வேலை, ஆவிக்குரிய வளர்ச்சி போன்றவற்றிற்காக ஜெபிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த பகுதிகள் தொடர்பான வார்த்தையை ஏற்று . (நீங்கள் நோவா செயலியில் தினசரி விசுவாச அறிக்கைகளை கிளிக் செய்து, உங்கள் தேவைக்கேற்ப தேவனின் வார்த்தையை எடுத்துக்கொள்ளுங்கள்) உங்கள் வாயைத் திறந்து, உங்கள் நிலைமையை அதிகாரத்துடன் பேசுங்கள்; அப்போதுதான் உங்கள் வாழ்க்கையில் பரிபுரணம் இருக்கும்.
தேவன் எவ்வாறு செயல்படுகிறார் என்பதை நாம் எவ்வளவு குறைவாக புரிந்துகொள்கிறோமோ, அவ்வளவு அதிகமாக நம் கிறிஸ்தவ பயணத்தில் விரக்தி அடைகிறோம். பின்னர் நாம் தேவனை குற்றம் சாட்டுகிறோம், சபையில் வருத்தப்படுகிறோம், சிலர் சபையை விட்டு வெளியேறுகிறார்கள்.
வாக்குமூலம்
1. நான் தொடர்ந்து வழிநடத்துதலைக் கொண்டிருக்கிறேன், ஏனென்றால் "கர்த்தர் என்னைத் தொடர்ந்து நடத்துவார்" (ஏசாயா 58:11).
2. நான் தேவனுடைய சமாதானத்தை உடையவனாக இருக்கிறேன், ஏனென்றால் நான் வசனத்தை ஏற்றுக்கொள்கிறேன், "எல்லா புத்திக்கும் மேலானா தேவசமாதானம், கிறிஸ்து இயேசுவின் மூலம் என் இருதயத்தையும் சிந்தையையும் காக்கும்" (பிலிப்பியர் 4:7).
3. நான் பயத்திலிருந்து விடுதலை பெற்றிருக்கிறேன், ஏனென்றால் நான் வசனத்தை ஏற்றுக்கொள்கிறேன், "உன் தேவனாகிய கர்த்தராகிய நான் என் வலது கையைப் பிடித்து, பயப்படாதே என்று சொல்லகிறார்" (ஏசாயா 41:13).
2. நான் தேவனுடைய சமாதானத்தை உடையவனாக இருக்கிறேன், ஏனென்றால் நான் வசனத்தை ஏற்றுக்கொள்கிறேன், "எல்லா புத்திக்கும் மேலானா தேவசமாதானம், கிறிஸ்து இயேசுவின் மூலம் என் இருதயத்தையும் சிந்தையையும் காக்கும்" (பிலிப்பியர் 4:7).
3. நான் பயத்திலிருந்து விடுதலை பெற்றிருக்கிறேன், ஏனென்றால் நான் வசனத்தை ஏற்றுக்கொள்கிறேன், "உன் தேவனாகிய கர்த்தராகிய நான் என் வலது கையைப் பிடித்து, பயப்படாதே என்று சொல்லகிறார்" (ஏசாயா 41:13).
Join our WhatsApp Channel
Most Read
● அலைவதை நிறுத்துங்கள்● யூதாஸ் வாழ்க்கையிலிருந்து பாடங்கள் - 1
● அவரது வலிமையின் நோக்கம்
● தூரத்தில் பின்தொடர்கிறது
● நாள் 13: 40 நாட்கள் உபவாசம் & ஜெபம்
● பரிசுத்த ஆவியின் மற்ற வெளிப்படுகளின் ஈவுகளுக்கான அணுகலைப் பெறுங்கள்
● தைரியமாக இருங்கள்
கருத்துகள்