”கர்த்தர் உங்கள் இருதயங்களை தேவனைப்பற்றும் அன்புக்கும் கிறிஸ்துவின் பொறுமைக்கும் நேராய் நடத்துவாராக.“
2 தெசலோனிக்கேயர் 3:5
தேவன் நம்மை முழுமையாக நேசித்தாலும், இந்த அன்பை அனுபவிப்பதில் நாம் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்; அது தானாக நடப்பதில்லை. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பூமியில் இருந்தபோதும், சிலரால் அவரிடதிலிருந்து சிறந்ததைப் பெற முடியவில்லை, ஆனால் அவர் அவர்களை நேசித்தார, அவர்களை ஆசீர்வதிக்கவும் விரும்பினார் (மாற்கு 6:1 - 6, மத்தேயு 13:54 - 58 ஐப் பார்க்கவும்) . பிரச்சினை அவருடன் இல்லை; அவர்கள் அவரை எப்படி ஏற்றுக்கொண்டார்கள் என்பதுதான்.
இதேபோல், தேவன் தனது மகத்தான அன்பை உலகிற்கு வெளிப்படுத்தி, தம்முடைய ஒரேபேரான குமாரணை நம் பாவங்களுக்காக மரிப்பதற்காக அனுப்புவதன் மூலம் அவருடைய மிகச் சிறந்ததை நமக்கு வழங்கியிருந்தாலும், பலர் இன்னும் இந்த அன்பைப் பெறவோ அல்லது அனுபவிக்கவோ இல்லை. இருப்பினும், இந்த அன்பைப் பெறுவதற்கு எடுக்க வேண்டிய முதல் படி, கிறிஸ்து செய்ததை நம்புவதும், அவரை ஆண்டவராக ஒப்புக்கொள்வதும், அதன் மூலம் இரட்சிக்கப்படுவதும் ஆகும் (ரோமர் 10:9).
இருப்பினும், தேவனின் அன்பின் அனுபவம் இரட்சிக்கப்படுவதற்கு மட்டுப்படுத்தப்படவில்லை. தேவனின் அன்பு இன்னும் பல பரிமாணங்கள் நமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன. ரோமர் 8:32-ல் வேதம் நமக்கு ஒரு முக்கியக் குறிப்பை வெளிப்படுத்துகிறது: ”தம்முடைய சொந்தக்குமாரனென்றும்பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?“
(ரோமர் 8:32, KJV). அது மிகவும் அழகாக இருக்கிறது!
தேவன் நம்மை மிகவும் நேசித்தபடியால், நாம் இன்னும் பாவிகளாக இருந்தபோது, நம்முடைய பாவங்களுக்காக மாரிக்கும்படி தம்முடைய குமாரனைக் கொடுத்தார், இப்போது நாம் அவருடைய பிள்ளைகளாக இருப்பதால் குறைவாக எதையும் எதிர்பார்க்கக்கூடாது. மற்றொரு வேதம் மொழிபெயர்ப்பு இவ்வாறு கூறுகிறது: “தேவன் நமக்காக எல்லாவற்றையும் வைக்கத் தயங்கவில்லை என்றால், நம் நிலைமையைத் தழுவி, தம்முடைய சொந்த மகனை அனுப்புவதன் மூலம் மிக மோசமான நிலைக்குத் தன்னை வெளிப்படுத்தினார் என்றால், அவர் செய்யாத வேறு ஏதாவது இருக்கிறதா? மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் நமக்காக செய்வாயார்?" (ரோமர் 8:32 MSB). நீங்கள் உண்மையிலேயே இதைப் பற்றி சிந்தித்தால், தேவனின் அன்பால் செய்ய நமக்கு செய்ய முடியாதாது ஒன்றும் இல்லை!
அவருடைய அன்பை எவ்வாறு பெறுவது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். நாம் அவரை அனுமதித்தால் மட்டும் நமக்காக எந்த எல்லைக்கும் செல்ல அவர் ஆயத்தமாக இருக்கிறார். யோவான் 1:12 நமக்குத் தெளிவாக வெளிப்படுத்துகிறது, ”அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.“
ஆகவே, தேவனின் அன்பில் தொடர்ந்து மூழ்குவதற்கு உங்கள் இருதயத்தைத் திறவுங்கள். நீங்கள் அவ்வாறு செய்யும்போது அவருடைய அற்புதமான அன்பின் உண்மைகளை அனுபவிப்பீர்கள். அவருடைய வார்த்தை, ஜெபம், ஆராதனை பாடல்கள், மற்ற கிறிஸ்தவர்களுடன் ஐக்கியம் போன்றவற்றின் மூலம் அவருடன் ஐக்கியம் கொள்வதன் மூலம் நீங்கள் அவருடைய அன்பில் நிரம்புவீர்கள். ஒவ்வொரு கணமும் தேவனின் அன்பை அனுபவிக்க உங்களை அர்ப்பணிக்க முடிவு செய்யுங்கள்.
ஜெபம்
அன்புள்ள பரலோகத் தகப்பனே, என்னை மிகவும் நேசித்ததற்காக நான் உமக்கு நன்றி கூறுகிறேன். ஒவ்வொரு சூழ்நிலையிலும் உமது அன்பை அனுபவிக்க எப்போதும் ஏற்றுக்கொள்ளும் தன்மையுடன் இருக்க எனக்கு உதவும். இயேசுவின் நாமத்தில். ஆமென்!
Join our WhatsApp Channel
Most Read
● தெய்வீக இரகசியங்களை வெளிப்படுத்துதல்● தேவன் - எல்ஷடாய்
● ஆவிக்குரிய பிரமாணம் : ஐக்கியத்தின் பிரமாணம்
● கர்த்தர் ஒருபோதும் தோல்வியடைய மாட்டார்
● உதாரணத்திற்கு வழிநடத்துங்கள்
● உங்கள் தரத்தை உயர்த்துங்கள்
● சொப்பனத்தில் தேவதூதர்களின் தோற்றம்
கருத்துகள்