தினசரி மன்னா
உங்கள் பிரச்சனைகலும் உங்கள் மனப்பான்மையும்
Wednesday, 24th of July 2024
0
0
319
Categories :
சோதனைகள்(Trials)
மனப்பான்மை (Attitude)
நான் என் குழந்தைப் பருவத்தை நினைவுகூர்கிறேன்; குழந்தைகளாகிய நாம் அடிக்கடி அக்கம்பக்கத்தில் விளையாடுவோம். எங்களிடம் கணினி விளையாட்டுகள் மற்றும் செயற்கைக்கோள் டிவி இல்லாததால், அது எப்போதும் வெளிப்புற விளையாட்டுகள்மட்டுமே. இது மிகவும் வேடிக்கையாக இருந்தது. இது ஒருபுறம் இருக்கட்டும், ஒரு மூலையில் குறிப்பிட்ட பாதையின் முடிவில் அச்சுறுத்தலாகத் தோன்றும் பெரிய சிவப்புப் பெட்டி நின்றது. எல்லா பெரியவர்களும் குழந்தைகளாகிய எங்களை எச்சரித்தார்கள். அதில் ஒரு மண்டை ஓடு உருவம் கூட இருந்தது. அப்பாவி குழந்தைகளான நாங்கள், “அதற்குள் ஒரு பேய் தங்கியிருந்தது” என்று சொல்லிவிட்டு, அதிலிருந்து வெகுதூரத்தில் தங்கிவிட்டோம் என்றெல்லாம் பலவிதமான கதைகளை அடிக்கடி உருவாக்குவோம். அதன் பின்பு தான், அது ஒரு உயர் அழுத்த மின்சார விநியோக பெட்டி என்பதை உணர்ந்தோம்.
கிறிஸ்தவர்களாகிய நமக்கு ஒரு எதிரி இருக்கிறான், அதன் பிரதான நோக்கமே திருடுவது, கொலை செய்வத, அழிப்பது. (யோவான் 10:10). நம்முடைய எதிரியாகிய பிசாசு கெர்ச்சிக்கிற சிங்கத்தைப் போல யாரை விழுங்கலாமோ என்று தேடி அலைகிறான் என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது. (1 பேதுரு 5:8).
எதிரி கையாள முடியாத அளவுக்கு நீங்கள் அனலாக இருக்க விரும்பினால், ஆவிக்குரிய வளர்ச்சியின் ரகசியத்தை நடைமுறையில் உங்கள் வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டும். ஆண்டவரோடு நான் நடந்த ஆண்டுகளில், நீங்கள் தேவனுடன் எவ்வளவு நெருக்கமாக நடக்கிறீர்களோ, அந்த அளவுக்கு உங்கள் வெற்றியின் நிலை உயர்கிறது என்பதை நான் கண்டுபிடித்தேன்.
ஆவிக்குரிய ரீதியில் வளர, நீங்கள் உங்கள் அணுகுமுறையில் வேலை செய்ய வேண்டும். தேவனின் விஷயங்களைப் பற்றிய உங்கள் அணுகுமுறை ஆவிக்குரிய வளர்ச்சியை தீர்மானிக்கிறது. நீங்கள் மறந்துவிடக் கூடாத ஒரு முக்கியமான உண்மை என்னவென்றால், பிரச்சனைகள் பெரும்பாலும் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு உரங்களாக இருக்கிறது.
“நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார். நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்.” சங்கீதம் 34:17, 19
பிரச்சனைகள் இல்லாத இடம் இந்த பூமியில் இல்லை. நீங்கள் உங்கள் வேதத்தை கவனமாகப் படித்தால், வேதத்தில் உள்ள அனைத்து தேவமனிதர்களும் நெருக்கடியான சூழ்நிலைகளை அனுபவித்தனர், ஆனால் நாளின் முடிவில் வல்லமைவாய்ந்த சாட்சியங்கள் இருப்பதை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். பிரச்சனைகள் உங்களை கசப்பாகவும் மாற்றலாம் அல்லது சிறந்ததாகவும் மாற்றலாம்.
ஒரு ரகசியத்தை பகிர்ந்து கொள்கிறேன். ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒரு கால அளவு உண்டு. அது என்றென்றும் தொடர முடியாது. தேவன், அவருடைய கிருபையால், உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் வெற்றியின் காலத்தை விதித்துள்ளார். இருப்பினும், அந்தப் பிரச்சனையைப் பற்றிய உங்கள் மனப்பான்மை அதன் கால அளவை நீட்டிக்கலாம் அல்லது குறைக்கலாம்.
வாழ்க்கையின் பிரச்சினைகளை வெல்லும் அறிவைப் யாருக்கு போதிப்பார்? யாருக்கு உபதேசத்தை உணர்த்துவார்? பால்மறந்தவர்களுக்கும், முலை மறக்கப்பண்ணப்பட்டவர்களுக்குமே.”
ஏசாயா 28:9
நம் மனப்பான்மைகள் உண்மையில் நம் இருதயத்தில் ஆழமாக என்ன நடக்கிறது என்பதன் வெளிப்புறக் காட்சியாகும். நம் இருதயங்கள் சரியான இடத்தில் அதாவது தேவனுடைய வார்த்தையில் கவனம் செலுத்தத் தொடங்கும் போது, நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றிய நமது அணுகுமுறையும் மாறும்.
வாக்குமூலம்
வாழ்வின் எல்லா காலங்களிலும், சமையங்களிலும் தேவனே எனக்கு இடைவிடாத அடைக்கலம்.
Join our WhatsApp Channel
Most Read
● உங்கள் சவுகரிய மண்டலத்திலிருந்து வெளியேறவும்● இயேசு உண்மையில் பட்டயத்தை கொண்டுவர வந்தாரா?
● ஆராதனைக்கான எரிபொருள்
● முன்மாதிரியாய் இருங்கள்
● நாள் 19: 40 நாட்கள் உபவாசம் மற்றும் ஜெபம்
● கர்த்தர் இருதயத்தை ஆராய்கிறார்
● இயேசு ஏன் கழுதையிiன் மேல் பவனி வந்தார்?
கருத்துகள்