அவர்களின் எண்ணங்களின் பலன் (எரேமியா 6:19)
தேவன் நம் எண்ணங்களைப் பற்றி அதிகம் கரிசன்னையுள்ளவறாக இருக்கிறார்.
முக்கிய காரணங்களில் ஒன்று, ஏனென்றால் நாம் செய்யும் எல்லாவற்றுக்கும் பின்னால் ஒரு சிந்தனை இருக்கிறது - நல்லது அல்லது தீமை.
#1: எண்ணங்கள் நம் வாழ்க்கையை கட்டுப்படுத்துகின்றன
“எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவ ஊற்று புறப்படும்.” நீதிமொழிகள் 4:23
நீங்கள் சிறு குழந்தையாகவோ அல்லது இளைஞராகவோ இருந்தபோது, சிலர் உங்களை தோற்றுப்போனவன் , எதற்கும் உதவாதவன் என்று திரும்பத் திரும்ப அழைத்து இருக்கலாம். நீங்கள் அந்த எண்ணத்தை ஏற்றுக்கொண்டால், அது தவறாக இருந்தாலும், அது உங்கள் வாழ்க்கையை வடிவமைக்கும்.
#2:நம் மனம் தான் உண்மையான யுத்தக்களம்
"கிறிஸ்தவ வாழ்க்கை ஒரு விளையாட்டு மைதானம் அல்ல, மாறாக ஒரு யுத்தக்களம்" என்று ஒருவர் சரியாகச் சொன்னார்.
இந்த யுத்தக்களம் எதோ நாடுகளில் இல்லை, ஆனால் நம் மனதில் உள்ளது. பலர் மனரீதியாக சோர்வு மற்றும் விரக்தியடைந்துள்ளனர், முதன்மையாக அவர்கள் ஒரு தீவிரமான மனப்போரில் செல்வதால், கைவிடும் விளிம்பில் உள்ளனர். உங்கள் மனமே மிகப் பெரிய சொத்து, சாத்தான் உங்கள் மிகப்பெரிய சொத்தை விரும்புகிறான்!
கவனியுங்கள், கர்த்தராகிய இயேசு அசுத்த எண்ணங்கள் மனிதர்களின் இருதயத்திலிருந்து வரும் முதல் விஷயங்கள் என்று பட்டியலிட்டார், இது ஒரு நபரைத் தீட்டுப்படுத்துகிறது.
“எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும். பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.”
மாற்கு 7:21-23
#3:உங்கள் மனமே அமைதிக்கான திறவுகோல்
யாருடைய எண்ணங்கள் உங்கள் மீது நிலைத்திருக்கிறதோ அவர்கள் அனைவரையும் நீங்கள் பூரண அமைதியுடன் வைத்திருப்பீர்கள்! (ஏசாயா 26:3)
நம் எண்ணங்கள் நம் சூழ்நிலைகளுக்குப் பதிலாக அவர் மீது நிலைநிறுத்தப்படும்போது பரிபூரண சமாதனாம் என்பது ஒரு உண்மை என்பதைக் கவனியுங்கள். ஜெபம் மற்றும் ஆராதனை மூலம் உங்கள் மனதை அவர் மீது நிலைநிறுத்துங்கள்.
மேலும், மனப்யுத்தத்தில் வெற்றி பெற, தேவனுக்கு பிரியமான விஷயங்களால் மனதை நிரப்புங்கள். அதனால்தான் வார்த்தையைப் படித்து தியானிப்பது மிகவும் முக்கியமானது. ஒருவர் என்னிடம் தினமும் எத்தனை அத்தியாயங்களைப் படிக்க வேண்டும் என்று கேட்டார். நல்ல உணவு இருக்கும் போது, நம்மில் பெரும்பாலோர் திருப்தி அடையும் வரை சாப்பிட விரும்புகிறோம். அவ்வாறே நீங்களும் தேவனுடைய வார்த்தையைக் கடைப்பிடிக்க வேண்டும். அந்த மனநிறைவு வரும் வரை படியுங்கள்.
உங்கள் முழு வாழ்க்கையையும் - உங்கள் மனம் உட்பட - இயேசு கிறிஸ்துவுக்கு அர்ப்பணிப்பதன் மூலம் இன்றே தொடங்குங்கள். வெற்றி நடை போடுவீர்கள்.
வாக்குமூலம்
நான் என் எண்ணங்களை இயேசுவின் இரத்தத்தால் மறைக்கிறேன். அசுத்த எண்ணங்களை அறிமுகப்படுத்த முயற்சிக்கும் ஒவ்வொரு வல்லமையையும், நான் இயேசுவின் நாமத்தில் பிணைக்கிறேன். எந்த வல்லமையும், என்னைத் தீட்டுப்படுத்த முயற்சிப்பது இயேசுவின் நாமத்தில் அக்கினியால் அழிக்கப்படும். நான் தினமும் தேவனுடைய வார்த்தையை தியானிப்பேன். என் மனதை நிரப்ப நான் வார்த்தையை அனுமதிப்பேன். இயேசுவின் நாமத்தில். ஆமென்!
Join our WhatsApp Channel
Most Read
● பாவத்துடன் போராட்டம்● வாழ்க்கையின் புயல்களுக்கு மத்தியில் விசுவாசத்தை கண்டறிதல்
● சாத்தான் உங்களை அதிகம் தடுக்கும் ஒரு பகுதி
● மணவாளனை சந்திக்க ஆயத்தப்படு
● சுத்திகரிப்பின் எண்ணெய்
● விசுவாசித்து நடப்பது
● தீர்க்கதரிசன மன்றாட்டு என்றால் என்ன?
கருத்துகள்