தினசரி மன்னா
உங்கள் விடுதலையை எப்படி வைத்திருப்பது
Tuesday, 13th of August 2024
0
0
260
Categories :
விடுதலை (Deliverance)
தேவவனிடமிருந்து பெற்ற விடுதலையை இழக்க முடியுமா?
ஒரு இளம் பெண்ணும் அவளது தந்தையும் ஒரு ஆராதனையின் போது என்னிடம் வந்து, “பாஸ்டர் மைக்கேல், நாங்கள் கடந்த ஆண்டு உங்கள் ஆராதனைக்கு வந்தோம், என் மகள் வல்லமையான விடுதலையைப் பெற்றாள். அவள் நன்றாக இருந்தாள், ஆனால் இப்போது, கடந்த சில வாரங்களாக, அவள் மீண்டும் தாக்கப்பட்டாள். உங்கள் விடுதலையைப் பெறுவது மட்டும் போதாது; நீங்கள் அடைந்ததை நீங்கள் பராமரிக்க வேண்டும்.
திருடுவதும், கொல்வதும், அழிப்பதும்தான் பிசாசின் முதன்மைப் பணி என்று வேதம் தெளிவாகச் சொல்கிறது. (யோவான் 10:10) நமக்குக் கிடைத்திருக்கும் இரட்சிப்பை இப்போது அல்லது எதிர்காலத்தில் நம்மிடமிருந்து எதிரி திருட முடியாதபடி அதை எப்படிக் காத்துக்கொள்வது என்பதைக் கற்றுக்கொள்ள நாம் எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.
#1. உங்கள் பழைய வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டாம்
நீங்கள் உங்கள் விடுதலையைப் பெற்றவுடன், உங்கள் பழைய வாழ்க்கை முறையிலிருந்து விலகி இருக்க நீங்கள் எல்லா முயற்சிகளையும் செய்ய வேண்டும். நீங்கள் ஒரு தேவனுடைய பிள்ளை என்று சொல்லிக்கொண்டு அதே நேரத்தில் பிசாசுடன் ஊர்சுற்றவும் முடியாது - இது மிகவும் ஆபத்தானது.
கர்த்தராகிய இயேசு ஒருமுறை ஒரு மனிதனை மிகவும் பயங்கரமான நிலையில் இருந்து விடுவித்தார். பின்னர் அவர் அவனை எச்சரித்தார், “இதோ, நீ சொஸ்தமானாய், அதிகக் கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.”
(யோவான் 5:14). விடுவிக்கப்பட்ட ஒரு நபர் தனது பழைய வாழ்க்கை முறைக்குத் திரும்பும்போது, அவன் அல்லது அவள் விடுவிக்கப்பட்ட அந்த அசுத்த ஆவிகள் மீண்டும் தாக்குகின்றன. சபைகளில் கலந்துகொள்ளும் பலர் மீண்டும் அதே பிரச்சினைகளுடன் ஒரு வாரம் திரும்பியதை நாம் காணும் முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.
#2. வார்த்தையினாலும் ஆவியினாலும் நிரப்பப்படுங்கள்
விடுதலைக்குப் பிறகு என்ன நடக்கிறது என்பது பற்றிய சில உண்மைகளையும் கர்த்தராகிய இயேசு மேலும் நமக்கு வெளிப்படுத்தினார்.
“எஜமான் வரும்போது அப்படியே செய்கிறவனாய்க் காணப்படுகிற ஊழியக்காரன் பாக்கியவான். தனக்குள்ளதெல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அந்த ஊழியக்காரனோ, என் எஜமான் வர நாள் செல்லும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு, வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் அடிக்கவும், புசித்துக் குடித்து வெறிக்கவும் தலைப்பட்டால்,”
லூக்கா 12:43-45
கர்த்தராகிய இயேசு மிகவும் வல்லமைவாய்ந்த ஒன்றை வெளிப்படுத்தினார். ஒரு நபர் அசுத்த ஆவியிலிருந்து விடுதலை பெறும்போதெல்லாம், அந்த ஆவி அந்த நபரை மீண்டும் அணுக முயற்சித்து மீண்டும் வருகிறது. அசுத்தஆவிகள் செயல்பட ஒரு சரீரம் தேவை, எனவே அவர்கள் வெளியேற்றப்பட்ட உடலில் இருந்து அணுகலைப் பெற தங்களால் முடிந்த அனைத்தையும் செய்யும்.
அந்த நபர் தேவனின் வார்த்தையாலும் ஆவியானவராலும் நிரப்பப்படவில்லை என்றால், அந்த அசுத்த ஆவி தன்னைவிட ஏழு வல்லமை வாய்ந்த ஆவிகளுடன் திரும்பி வந்து அந்த மனிதனை மீண்டும் கைப்பற்றுகிறது. இப்போது இந்த நபரின் நிலை முன்பை விட மோசமாக மாறுகிறது. இது இப்போது நற்செய்தியின் எதிரிகள் தேவனின் வேலையை விமர்சிக்க வாய்ப்பளிக்கிறது.
“இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.”
என்று இயேசு கூறினார். (யோவான் 8:31-32). விடுதலை பெற்ற ஒருவர் தேவனுடைய வார்த்தையைப் படிப்பதிலும் தியானிப்பதிலும் நேரத்தை செலவிடுவது மிகவும் முக்கியம்.
“துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினால் நிறைந்து;” (எபேசியர் 5:18)
நம்முடைய விடுதலையைப் பேணுவதற்கு நாம் தொடர்ந்து ஆவியானவரால் நிரப்பப்பட வேண்டும் என்று வேதம் சொல்கிறது. மத்தேயு 12:43-45 இல், அந்த நபரின் வாழ்க்கை வெறுமையாக இருந்தது, அதனால்தான் அசுத்த ஆவி அந்த மனிதனை மீண்டும் கைப்பற்றியது. அந்த மனிதன் ஆவியானவரால் நிரப்பப்படுவதை கவனித்திருந்தால், அவன் மீண்டும் பாதிக்கப் பட்டிருக்கமாட்டான் மாட்டான்.
அதனால்தான் விடுதலை பெற்ற ஒருவர் அபிஷேகம் நிறைந்த ஆராதனையில் தொடர்ந்து கலந்துகொள்ள வேண்டும். அத்தகைய ஆராதனையில், வார்த்தையும் ஆவியும் அத்தகைய நபருக்கு ஊழியம் செய்து ஒரு நபரை மேலும் பலப்படுத்துகிறது. அதனால்தான் எங்கள் ஆன்லைன் சேவைகளில் கலந்துகொள்ளுமாறு ஜனங்களை நான் தொடர்ந்து கேட்டுக்கொள்கிறேன்.
இறுதியாக, உங்கள் வீடு, உங்கள் கார் போன்றவற்றில் ஆராதனை பாடல்களை தொடர்ந்து கேட்டு கொண்டிருங்கள். இது உங்களை சுதந்திரமான சூழலில் வாழ வைக்கும். “கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு.” என்று வேதம் கூறுகிறது. (2 கொரிந்தியர் 3:17)
ஜெபம்
கர்த்தராகிய இயேசுவே, உமது வார்த்தையில் தொடர்ந்து இருப்பதற்கும், உமது வார்த்தையினால் அனுதினமும் செழுமையாவதற்கும் எனக்கு கிருபை தாரும். பரிசுத்த ஆவியானவரே, என் பாத்திரம் நிரம்பி வழியும் வரை என்னை நிரப்பும். என் அனைத்தையும் எடுத்துக்கொள்ளும். இயேசுவின் நாமத்தில். ஆமென்!
Join our WhatsApp Channel
Most Read
● விடாய்த்த நிலையை வரையறுத்தல்● தெய்வீக இரகசியங்களை வெளிப்படுத்துதல்
● நாள் 18: 40 நாட்கள் உபவாசம் மற்றும் ஜெபம்
● தேவனின் அன்பை அனுபவிப்பது
● வார்த்தையின் தாக்கம்
● கர்த்தர் ஒருபோதும் தோல்வியடைய மாட்டார்
● தேவதூதர்களிடம் நாம் ஜெபிக்கலாமா
கருத்துகள்