தினசரி மன்னா
0
0
180
இயேசு பகிர்ந்த திராட்சரசம்
Saturday, 16th of November 2024
Categories :
Temptation
“கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்துக்கு அவர்கள் வந்தபோது, கசப்புக்கலந்த காடியை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ருசிபார்த்து, குடிக்க மனதில்லாதிருந்தார்.”
மத்தேயு 27:33-34
“காடி நிறைந்த பாத்திரம் அங்கே வைக்கப்பட்டிருந்தது; அவர்கள் கடற்காளானைக் காடியிலே தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டி, அவர் வாயினிடத்தில் நீட்டிக்கொடுத்தார்கள். இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.”
யோவான் 19:29-30
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் இருக்கும் போது 'இரண்டு முறை' காடியை அருந்தப்பட்டதை மேலே உள்ள வசனங்களிலிருந்து நீங்கள் தெளிவாகக் காணலாம். அவர் முதலில் மறுத்துவிட்டார், ஆனால் இரண்டாவது வாங்கிகொண்டார். ஏன் அப்படி?
இயேசுவுக்கு முதன்முறையாக திராட்சரசம் கொடுக்கப்பட்டபோது, அதில் வெள்ளைப்போளம் (மாற்கு 15:23) கலந்திருந்தது.
ஒரு பழைய பாரம்பரியத்தின் படி, ஜெருசலேமின் மரியாதைக்குரிய பெண்கள், மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு போதை பானத்தை வழங்கினர், இது வேதனையான வலிக்கு அவர்களின் உணர்திறனைக் குறைக்கிறது. கர்த்தராகிய இயேசு கொல்கொத்தாவுக்கு வந்தபோது, அவருக்கு வெள்ளைப்போளத்துடன் கலந்த வழங்கப்பட்டது, ஆனால் அவர் அதை மறுத்துவிட்டார்.
இந்த முதல் ரசம் வலியை ஓரளவிற்குக் குறைக்கும் வாய்ப்பைக் குறிக்கிறது. கர்த்தராகிய இயேசு இதை மறுத்து, "தனக்காக நியமிக்கப்பட்ட துன்பங்களை முழு உணர்வுடன் சகித்துக்கொள்ள" தேர்ந்தெடுத்தார்.
வெள்ளைப்போளம் கலந்த இந்த முதல் ரசம் தாவீது ராஜா கூறிய தீர்க்கதரிசனத்தை நிறைவேருதலாக இருந்தது. ஒரு வேதனையான சோதனையின் ஆழத்தில் இருந்தபோது, தாவீது தனது தாகத்தைத் தணிக்க தனது எதிரிகள் கசப்பான ஒன்றை மட்டுமே கொடுத்ததாக அழுதார் (சங்கீதம் 69:16 - 21)
பழைய ஏற்பாட்டில் புத்துணர்ச்சியூட்டும் பானம் (எண்ணாகமம் 6:13; ரூத் 2:14) என்று வேத வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். கிரேக்க இலக்கியங்களிலும் ரோமானிய இலக்கியங்களிலும், இது தொழிலாளர்கள் மற்றும் வீரர்களால் எடுத்துக்கொள்ளப்படும் ஒரு பொதுவான பானமாகும், ஏனெனில் இது தண்ணீரை விட தாகத்தைத் திறம்பட தணிப்பதுமட்டுமல்லாமல் மலிவானதும் கூட.
இயேசுவுக்கு இரண்டாவது முறை திராட்சரசம் கொடுக்கப்பட்டது, முடிந்தவரை இயேசுவை உணர்வோடு வைத்திருக்கும் நோக்கத்துடன் இருந்தது.
குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்ட மற்ற குற்றவாளிகள் (தங்கள் வேதனையைத் தணிக்க) முதலாவதாக கொடுக்கப்பட்டதை எடுத்துக் கொண்டிருப்பார்கள், இரண்டாவதாக (தங்கள் கொடூரமான வலியை நீடிக்காதபடி) கொடுக்கப்பட்டதை எடுத்து இருக்கமாட்டார்கள். ஆனால் நம்முடைய மீட்பைப் பாதுகாக்க இயேசு எந்த குறுக்குவழிகளையும் எடுக்கவில்லை.
சிலுவையில், கர்த்தராகிய இயேசு தம்முடைய பிதாவின் கோபத்தின் திராட்சரசத்தை அருந்தினார், அவருடைய தந்தையின் அன்பின் திராட்சரசத்தை நாம் அனுபவிக்கும்படியாகவும், ஆட்டுக்குட்டியானவரின் திருமண விருந்தில் அவருடன் சேர்ந்து, நம்மைக் காப்பாற்ற எந்த குறுக்குவழிகளையும் எடுக்காதவரின் மகிமையான முன்னிலையில் என்றென்றும் மீட்கப்பட்டு வாழுவோம்.
ஜெபம்
கர்த்தராகிய இயேசுவே, சிலுவையில் எனக்காக நீர் அனுபவித்த வேதனை மற்றும் எல்லா துன்பங்களுக்காகவும் நான் நன்றிசெலுத்துகிறேன். நான் தற்போது அனுபவித்து வருவதை நீர் நன்றாக புரிந்துகொள்கிறீர். என்னையும் என் குடும்ப உறுப்பினர்களையும் பலப்படுத்தும் என்று ஜெபிக்கிறேன். இயேசுவின் நாமத்தில். ஆமென்.
Join our WhatsApp Channel

Most Read
● தெளிவான உபதேசத்தின் முக்கியத்துவம்● உங்கள் கடந்த காலத்தை உங்கள் எதிர்காலத்திற்கு பெயரிட அனுமதிக்காதீர்கள்
● நாள் 02 : 40 நாட்கள் உபவாசமும் ஜெபமும்
● தெய்வீக ஒழுக்கத்தின் தன்மை-1
● நாள் 03 : 40 நாட்கள் உபவாசமும் ஜெபமும்
● சுய மகிமை என்னும் கண்ணி வலை
● இரண்டு முறை மரிக்க வேண்டாம்
கருத்துகள்