தினசரி மன்னா
இழந்த ரகசியம்
Monday, 30th of September 2024
0
0
167
Categories :
சீடத்துவம் (Discipleship)
சுய பரிசோதனை (Self Examination)
மனுஷன் மற்றவர்களையே ஆராய்ந்து அறிந்துக்கொள்ள நினைக்கிறான். மறுபுறம், வேதம் நமக்கு எவ்வாறு கட்டளையிடுகிறது:
“எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து,”
1 கொரிந்தியர் 11:28
ஆண்டவருடனான நமது பயணத்தில், ஒரு நாள், நான் பரிசுத்த ஆவியானவரிடம், “நான் எப்படி அடுத்த நிலைக்குச் செல்வது?” என்று கேட்டேன். என் ஆவி மனிதனில் எனக்கு இந்த எண்ணம் இருந்தது. "தனிப்பட்ட சுயபரிசோதனையின் பழக்கத்தைப் பெற வேண்டும்" இதை நான் என் ஆவியில் கேட்டேன்; இதை நான் வேதத்தில் அதிகமாக பார்க்க ஆரம்பித்தேன்.
“நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்;”
2 கொரிந்தியர் 13:5
“அவனவன் தன்தன் சுயகிரியையைச் சோதித்துப்பார்க்கக்கடவன்; அப்பொழுது மற்றவனைப் பார்க்கும்போதல்ல, தன்னையே பார்க்கும்போது மேன்மைபாராட்ட அவனுக்கு இடமுண்டாகும்.”
கலாத்தியர் 6:4
மத்தேயு 7:1-5ல் கர்த்தராகிய இயேசு இந்த சுய பரிசோதனை உண்மையை மிக அழகாக வெளிப்படுத்தினார்
நம்மைச் சுற்றியுள்ளவர்களின் கண்களில் உள்ள அழுக்கை பற்றியே நாம் அடிக்கடி கவலைப்படுகிறோம். அதற்கு பதிலாக, நாம் நம் கண்களை பரிசோதிக்க வேண்டும், அவ்வாறு செய்வதன் மூலம், நம் கண்களில் இருக்கும் அழுக்கை காணலாம். நம்முடைய சொந்த பிரச்சினைகளை நாம் கையாளும் போது, நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு உதவுவதற்காண சிறந்த நிலையில் இருப்போம்.
நான் மத்தேயு 7:1-5 ஐ ஒரு சொற்பொழிவு பாணியில் சொல்ல விரும்புகிறேன், இதன் மூலம் நீங்கள் எளிமையாய் புரிந்துக்கொள்ள முடியும்.
பிரதிபலிப்பதன் மூலம்...
நீங்கள் என்ன செய்கிறீர்கள்?
உங்கள் ஒரு நாளை, நேரத்தை எப்படி செலவிடுகிறீர்கள்?
மற்றும் நீங்கள் நினைக்கும் எண்ணங்கள்.
சுய முன்னேற்றத்தை அளவிடுவதற்கான அளவுகோலை நீங்களே அமைத்துக்கொள்ளுங்கள். இன்று நீங்கள் என்ன தவறு செய்தீர்கள் என்பதை அறிவதுதான் நாளைய தினத்தை மேம்படுத்த ஒரே வழி.
கடைசியாக, சுயபரிசோதனை செயல்முறையை மிகவும் பயனுள்ளதாக மாற்ற, அது மீண்டும் நடக்காதபடி ஒரு தெளிவான திட்டத்தைக் கொண்டு வர வேண்டும்.
ஜெபம்
“தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்.”
சங்கீதம் 139:23-24
சங்கீதம் 139:23-24
Join our WhatsApp Channel
Most Read
● தீர்க்கதரிசன வார்த்தையைப் பெற்ற பிறகு என்ன செய்வது?● நிராகரிப்பை சமாளித்தல்
● போற்றப்படாத கதாநாயகர்கள்
● நாள் 16: 40 நாட்கள் உபவாசம் & ஜெபம்
● தேவனின் ஏழு ஆவிகள்: வல்லமையின் ஆவி
● இயேசு பகிர்ந்த திராட்சரசம்
● இயேசு இப்போது பரலோகத்தில் என்ன செய்துகொண்டிருக்கிறார்?
கருத்துகள்