தினசரி மன்னா
தேவனுடைய வார்த்தைகளை ஆழமாக உங்கள் இருதயத்தில் பதியுங்கள்
Thursday, 26th of September 2024
0
0
173
Categories :
தேவனின் வார்த்தை ( Word of God )
“நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன். கர்த்தாவே, நீர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; உம்முடைய பிரமாணங்களை எனக்குப் போதியும்.” சங்கீதம் 119:11-12
இன்றைய வசனம் தேவனுடைய வார்த்தையைப் பற்றிய முக்கியமான பாடத்தை கற்பிக்கிறது. வேதத்தில் நீங்கள் வாசிப்பது வார்த்தைகளை தாண்டி அதிகம் உள்ளது. இது வாழ்க்கையை மாற்றும் திறனைக் கொண்டுள்ளது. கர்த்தராகிய இயேசுவே, “நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது.”
(யோவான் 6:63) என்று அறிவித்தார்.
இந்த ஜீவன் தரும் ஆற்றல் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதையும் இது காட்டுகிறது. தேவனுடைய வார்த்தையை உங்கள் இருதயத்தில் விதைக்கும்போது அது செயல்படுத்தப்படுகிறது.
நீங்கள் தேவ வார்த்தையைப் படிக்கவோ அல்லது கேட்கவோ தொடங்கும் போது, அதை உங்கள் காதுகள் மற்றும் கண்கள் மூலம் உங்கள் மனதில் கொண்டு வருகிறீர்கள், ஆனால் நீங்கள் அதை உங்கள் இருதயத்தில் பெறும்போது அதன் உண்மையான வல்லமை வெளியிடப்படுகிறது. அப்போதுதான் அது ஜீவன் பெறுகிறது.
உதாரணமாக: குணமாக்கும் வேத வசனங்கள் மற்றும் போதனைகளை நீங்கள் தொடர்ந்து கேட்டு, படித்து, தியானித்துக் கொண்டிருந்தால், இறுதியில் உங்கள் இருதயத்தில் ஒரு வலுவான நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுவீர்கள், மேலும் இந்த நம்பிக்கை உங்கள் சரீரத்தை குணமாக்கும். உங்கள் இருதயம் அந்த வாக்குதத்தங்களை பற்றிக்கொள்ளும் போது, அது உங்கள் இருதயத்திலிருந்து வெளியேறி உங்கள் வாழ்க்கையில் நிறைவேற தொடங்குகிறது.
நீங்கள் அசுத்தமான எண்ணங்கள் மற்றும் கனவுகளுடன் போராடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்; அப்படியானால், இந்தத் தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ள வேதவசனங்களைப் படித்து தியானிக்க வேண்டும். இப்படிச் செய்தால் பாவம் நீங்கி உங்கள் அழைப்பு நிறைவேறும்.
தேவனுடைய வார்த்தை பெரும்பாலும் ஒரு விதை என்று குறிப்பிடப்படுகிறது. புதிய ஏற்பாட்டில், கிரேக்க வார்த்தையான "ஸ்பெர்மா" பெரும்பாலும் "விதை" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதே வார்த்தையில் இருந்து தான் நமது ஆங்கில வார்த்தையான "Sperm" விந்து அல்லது விதை ஆனது.
இயற்கையில் இருப்பதைப் போலவே, ஆவி மண்டலத்திலும், உங்களுக்குத் தேவையான அற்புதங்களைப் பெற்றெடுக்க, நீங்கள் முதலில் தேவனுடைய வார்த்தையை உங்கள் இருதயத்தில் ஒரு விதை போல விதைக்க வேண்டும்.
குறிப்பு: நமதுசெயலியில் பாஸ்டர் மைக்கேலின் போதனைகளை தவறாமல் கேட்பது தேவனுடைய வார்த்தையை தியானிக்க ஒரு சிறந்த வழியாகும்.
ஜெபம்
தகப்பனே, உமது வார்த்தைகள் என்னில் நிலைத்திருக்கும்படி, தினமும் உமது வார்த்தையை தியானிக்க எனக்கு கிருபை தாரும், அப்பொழுது நான் கேட்டு கொள்ளுவது எதுவோ, அது எனக்காகச் அருளப்படும். இயேசுவின் நாமத்தில். ஆமென்!
Join our WhatsApp Channel
Most Read
● இயேசுவின் கிரியைகளிலும் பெரிய கிரியைகளையும் செய்வது என்றால் என்ன?● கவனிப்பில் ஞானம்
● நீங்கள் அவர்களை பாதிக்க வேண்டும்
● தேவனின் ஏழு ஆவிகள்: அறிவின் ஆவி
● ஏன் தேவ மனிதர்கள் வீழ்கின்றனர் - 5
● உங்கள் ஆவிக்குரிய பலத்தை எவ்வாறு புதுப்பிப்பது -2
● உங்கள் ஆவியை புதுப்பித்து கொள்ளுதல்
கருத்துகள்