தினசரி மன்னா
யூதாஸ் வாழ்க்கையிலிருந்து பாடங்கள்- 3
Friday, 25th of October 2024
0
0
90
Categories :
சரணடைதல் (Surrender)
யூதாஸின் வாழ்க்கையிலிருந்து பாடங்கள் என்ற நமது தொடரில் தொடர்கிறோம்:.
“அவர் பெத்தானியாவில் குஷ்டரோகியாயிருந்த சீமோன் வீட்டிலே போஜனபந்தியிருக்கையில், ஒரு ஸ்திரீ விலையேறப்பெற்ற நளதம் என்னும் உத்தம தைலமுள்ள வெள்ளைக்கல் பரணியைக் கொண்டுவந்து, அதை உடைத்து, அந்தத் தைலத்தை அவர் சிரசின்மேல் ஊற்றினாள்.
அப்பொழுது சிலர் தங்களுக்குள்ளே விசனமடைந்து: இந்தத் தைலத்தை இப்படி வீணாய்ச் செலவழிப்பானேன்?”
மாற்கு 14:3-4
அந்த ஸ்திரீ ஆண்டவர் இயேசுவின் தலையில் மிகவும் விலையுயர்ந்த தைலத்தை ஊற்றியபோது, யூதாஸ் மிகவும் வருத்தப்பட்டான். அந்தப் ஸ்திரீ இயேசுவுக்கு எதையாவது கொடுப்பதில் அவனுக்கு பிரச்சனை இல்லை - ஆனால் எல்லாவற்றையும் கொடுப்பதில் பிரச்சனை இருந்தது. நான் இயேசுவுக்கு எதையாகிலும் கொடுப்பேன், ஆனால் எல்லாவற்றையும் கொடுக்கமாட்டேன் என்ற மனப்பான்மை ஒருவருக்கு இருந்தால், அத்தகைய நபர் அனைத்தையும் இழக்க நேரிடும். உண்மை என்னவெனில்; யூதாஸ் ஒருபோதும் இயேசுவிடம் முழுமையாக தன்னை ஒப்பு கொடுக்கவில்லை. அவன் எப்போதும் தனது சொந்த நிகழ்ச்சி நிரலை செயல்படுத்தினான்.
இன்றும் கூட, இயேசுவிடம் தன்னை ஒப்புக்கொடுப்பவர்கள் பலர் இருக்கிறார்கள், அதனால் அவர்கள் பரலோகத்திற்குச் செல்ல முடியும் என்பதற்காக, ஆனால் அது அவர்களின் வாழ்க்கையில் எந்த பாதிப்பும் இருக்கக்கூடாது . அத்தகையவர்கள் இயேசுவை நித்தியத்துடன் நம்புகிறார்கள், ஆனால் அன்ட்றாட வாழ்க்கையில் நம்புவதில்லை. இயேசுவை முழுமையாய் அடைய விரும்பினால், உங்கள் அனைத்தையும் ஒப்புகொடுக்க வேண்டும்!
இரண்டாவதாக, அந்த ஸ்திரீ ஆராதனை என்று கருதியது யூதாஸின் பார்வையில் அது வீணாக தெரிந்தது. துரதிர்ஷ்டவசமாக, இன்றைய காலகட்டத்திலும் கூட, கிறிஸ்துவுக்கு அர்ப்பணிப்புடன் வெளித்தோற்றத்தில் தோன்றும் பலர் ஆராதனையை வீணாகக் கருதுகின்றனர். அவர்களின் தனிப்பட்ட ஜெப நேரங்களின் போது, அவர்கள் தேவனை ஆராதிப்பதில்லை. அவர்கள் ஜெபிக்கலாம் ஆனால் ஆராதிக்க மாட்டார்கள்.
அவர்கள் சபை ஆராதனைகளில் (ஆன்லைனில் அல்லது நேரடியாகவோ) கலந்துகொள்கிறார்கள், ஆனால் ஆராதனைக்கு ஒருபோதும் நேரத்துக்கு வர மாட்டார்கள். ஏன் என்று விசாரித்தால், “தேவனுடைய வார்த்தைக்காகவே வருகிறேன்” என்று ஆவிக்குரிய பதிலைச் சொல்கிறார்கள். சபை ஆராதனைக்கு (ஆன்லைனில் அல்லது நேரடியாகவோ) நீங்கள் எப்போதும் சரியான நேரத்தில் இருப்பீர்கள் என்று இன்று முடிவெடுத்து அவரை ஆராதியுங்கள்.
இந்த ஸ்திரீக்கு தெளிவான புரிதல் இருந்தது. அவள் எவ்வளவு மன்னிக்கப்பட்டாள் என்பதற்கான ஆழ்ந்த உணர்வு இருந்தது. நாம் எவ்வளவு மன்னிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உண்மையாகப் புரிந்து கொண்டால், அவர் நம்மை எவ்வளவு நேசிக்கிறார் என்பதை அறிந்துகொண்டால் நாமும் தேவனை மேலும் மேலும் ஆராதிப்போம்.
வாக்குமூலம்
பரலோகத் தகப்பனே, நீர் எங்கு நடத்தினாலும் உமது திட்டங்களுக்கு நான் ஒப்புக்கொடுக்கிறேன், ஆண்டவரே; நீர் என்னை எவ்வளவாய் பயன்படுத்த சித்தம் கொண்டிருக்கிறரோ, அவ்வளவாய் என்னை பயன்ப்படுத்திமாறு பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நீர் விரும்பும் பாத்திரமாய் மாற எனக்கு உதவும். இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென்!
Join our WhatsApp Channel
Most Read
● நாள் 04: 40 நாட்கள் உபவாச ஜெபம்● தேவ ஆலோசனையின் அவசியம்
● ஒரு நோக்கத்திற்காக பிறப்பு
● ஒரு மரித்த மனிதன் ஜீவனோடு இருப்பவர்களுக்காக ஜெபம் செய்கிறான்
● நீங்கள் தேவனுடைய அடுத்த இரட்சகராக முடியும்
● திருப்தி நிச்சயம்
● நாள் 17: 40 நாட்கள் உபவாச ஜெபம்
கருத்துகள்