“இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டபோது, கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை இரட்சிக்கும்படி காலேபின் தம்பியான கேனாசுடைய குமாரனாகிய ஒத்னியேல் என்னும் ஒரு இரட்சகனை அவர்களுக்கு எழும்பப்பண்ணினார்.”
நியாயாதிபதிகள் 3:9
ஒத்னியேல் என்ற மனிதனைப் பற்றி நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
பெரும்பாலும் இல்லை.
அவன் காலேபின் மருமகன். இஸ்ரவேல் மக்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திற்குச் சென்றபோது, யோசுவா மற்றும் காலேபின் துணிச்சலான முயற்சியால் அவர்கள் வெற்றி பெற்றனர். இந்தத் தலைமுறை வளர வளர, புதிய தலைமுறை உருவாகத் தொடங்கியது. இஸ்ரவேலர் மீண்டும் விக்ரகங்களை வணங்கி பாவத்தில் விழுந்தனர். கர்த்தருடைய கோபம் இஸ்ரவேலுக்கு எதிராக எரிந்தது, மேலும் அவர் அவர்களை மீண்டும் ஒருமுறை எதிரிகளால் அடிமைப்படுத்த அனுமதித்தார். இருப்பினும், ஜனங்கள் மீண்டும் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள், தேவன் அவர்களுக்குச் செவிசாய்த்தார்.
தேவனுடைய ஜனங்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடும்போதெல்லாம், அவர்கள் உண்மையிலேயே மனந்திரும்பும்போது அவர் அவர்களுக்குச் செவிகொடுக்கிறார். இது போன்ற ஒரு காலத்திற்கு அவர் ஆயத்தம் செய்தவர்களை எழுப்புவதன் மூலம் அவர் பதிலளிக்கிறார். ஒவ்வொரு ராணுவ வீரரும் தான் பெற்ற பயிற்சியை பயன்படுத்தும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தேவன் இப்படிபட்ட ஒரு காலத்திற்கு ஒரு நபரை ஆயத்தம் செய்து கொண்டிருந்தார். அவனுடைய மாமனாகிய காலேபைப் போலவே அவனுக்கும் அதே ஆவி இருந்தது.
“அவன்மேல் கர்த்தருடைய ஆவி வந்திருந்ததினால், அவன் இஸ்ரவேலை நியாயம் விசாரித்து, யுத்தம்பண்ணப் புறப்பட்டான்; கர்த்தர் மெசொப்பொத்தாமியாவின் ராஜாவாகிய கூசான்ரிஷதாயீமை அவன் கையிலே ஒப்புக்கொடுத்தார்; ஆகையால் அவன் கை கூசான்ரிஷதாயீமின்மேல் பலங்கொண்டது. தேசம் நாற்பது வருஷம் அமைதலாயிருந்தது. கேனாசின் குமாரனாகிய ஒத்னியேல் மரணமடைந்தான்.”
நியாயாதிபதிகள் 3:10-11
உங்களை நிராகரித்தவராகவும், உடைந்தவராகவும், எதற்கும் உதவாதவராகவும் பார்க்காதீர்கள். ஆகவே, தேவனுடைய ஜனங்களை விடுவிக்க அல்லது அவர்களுக்கு ஏதாவது ஒரு வழியில் உதவ நீங்கள் அழைக்கப்படும் ஒரு காலத்திற்கு தேவன் உங்களை ஆயத்தப்படுத்தி கொண்டிருக்கக்கூடும்.
இன்று நீங்கள் ஒரு "பெயர் இல்லாதவராக" இருக்கலாம், ஆனால் கர்த்தருடைய ஆவி உங்கள் மீது வரும்போது, நீங்கள் முற்றிலும் மாறுபட்ட நபராக மாறுவீர்கள். தேவனுடைய ஆவி உங்கள் மீது தங்கியிருக்க ஊக்கமாக ஜெபியுங்கள்.
கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும், கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார்.
ஜெபம்
கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும், கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார். மகிமையின் ஆவி இயேசுவின் நாமத்தில் என்மீது தங்கியிருப்பதால், பெரிய காரியங்களைச் செய்ய நான் அழைக்கப்பட்டிருக்கிறேன். ஆமென்!
Join our WhatsApp Channel
Most Read
● சரணடைவதில் உள்ள சுதந்திரம்● நோக்கத்தில் மேன்மை
● அசுத்த ஆவிகளின் நுழைவிடத்தை மூடுதல் - II
● விசுவாசத்தின் வல்லமை
● பணம் குணத்தை பெருக்கும்
● ஒவ்வொரு நாளும் புத்திமானாய் வளர்வது எப்படி
● உள்ளான அறை
கருத்துகள்