தினசரி மன்னா
ஆரம்ப நிலைகளில் தேவனை துதியுங்கள்
Tuesday, 12th of November 2024
0
0
79
Categories :
Praise
“உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி, நான் உங்களை நினைக்கிறபொழுதெல்லாம் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.”
பிலிப்பியர் 1:5-6
வேதம் சொல்லகிறது, எஸ்றா 3:10-11, “சிற்பாசாரிகள் கர்த்தருடைய ஆலயத்திற்கு அஸ்திபாரம்போடுகிறபோது, இஸ்ரவேல் ராஜாவாகிய தாவீதுடைய கட்டளையின்படியே, கர்த்தரைத் துதிக்கும்படிக்கு, வஸ்திரங்கள் தரிக்கப்பட்டு, பூரிகைகளை ஊதுகிற ஆசாரியரையும், தாளங்களைக் கொட்டுகிற ஆசாபின் குமாரராகிய லேவியரையும் நிறுத்தினார்கள். கர்த்தர் நல்லவர், இஸ்ரவேலின்மேல் அவருடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைப் புகழ்ந்து துதிக்கையில், மாறிமாறிப் பாடினார்கள்; கர்த்தரைத் துதிக்கையில், ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரம் போடப்படுகிறதினிமித்தம் மகா கெம்பீரமாய் ஆரவாரித்தார்கள்.”
ஏன் அப்படி செய்தார்கள் என்று நீங்கள் யோசிக்கலாம். அஸ்திபாரம் மட்டுமே போடப்பட்டது. ஆலயம் இன்னும் கட்டப்படவில்லை. அவர்கள் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அநேகம் இருந்தது. இன்னும் அவர்கள் ஆலயம் கட்டப்படுவதற்கு முன்பே தேவனை துதிக்கத் தொடங்கினார்கள்? நீங்கள் பார்க்க வேண்டும் என்று நான் விரும்பும் சில ஆழமான ரகசியங்கள் உள்ளன.
துதி என்பது விசுவாசத்தின் செயல்
வேதம் கூறுகிறது, “ஆண்டவரே, நீர் துவங்கினதை, உம்மால் செய்து முடிக்க முடியும, முடிப்பீர் என்று நான் விசுவாசிக்கிறேன். உமது திட்டத்தை எனக்கு தந்ததற்கு நன்றி, காரணம் உமது திட்டம் எப்போதும் வெற்றி தரும். நீங்கள் புதிதாக ஏதாவது செய்யத் தொடங்கினால், சந்தேகங்கள் உங்கள் மனதைத் தாக்கத் தொடங்கும். "இந்த காரியம் வெற்றி பெறுமா?" இதுபோன்ற சமயங்களில், தேவனை துதிக்கத் தொடங்குங்கள், சிறிய துவக்கங்களுக்கு நன்றி கூறுங்கள். நீங்கள் இன்னும் நம்பமுடியாத விஷயங்களைக் காண்பீர்கள்.
துதி உங்களை பலப்படுத்தும்
நெகேமியா தன் வேலையாட்களிடம், “கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்கள் பலம்” என்றார். (நெகேமியா 8:10). உங்கள் மகிழ்ச்சியை இழந்தால், உங்கள் வலிமையை இழக்கிறீர்கள். உங்கள் பலத்தை நீங்கள் இழந்தால், உங்கள் எதிரியை வெல்லும் உங்கள் வல்லமையை இழக்கிறீர்கள். உங்கள் எதிரியை வெல்லும் வல்லமையை நீங்கள் இழந்தால், நீங்கள் தோற்கடிக்கப்படுவீர்கள். வேதம் கூறுகிறது, “தேவனுடைய வாக்குத்தத்தத்தைக்குறித்து அவன் அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல், தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்.”
ரோமர் 4:20-21
துதி உங்கள் சூழலை மாற்றுகிறது
மண், கல், சிமெண்ட் மற்றும் ஒரு பகுதியாக கட்டப்பட்ட கட்டிடத்தை கற்பனை செய்து பாருங்கள், அதன் நடுவில், ஜனங்கள் தேவனை துதித்து ஆர்ப்பரித்தார்கள். நீங்கள் தேவனை துதிக்கும்போது, உங்கள் பிரச்சனைகள் மாறாமல் இருக்கலாம், ஆனால் உங்கள் பார்வை நிச்சயம் மாறும். எளிமையாகச் சொன்னால், ஆரம்ப கட்டங்களில் நீங்கள் தேவனை துதிக்கும்போது, நீங்கள் சிறப்பாகச் செயல்படுகிறீர்கள், மேலும் வேலை விரைவாகவும் வேகமாகவும் செய்யப்படுகிறது, உங்கள் நம்பிக்கை கட்டமைக்கப்படுகிறது, மேலும் நீங்கள் செய்யும் வேலையில் தேவன் உங்களுடன் இருக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
ஜெபம்
கர்த்தரின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன்; உமது உண்மையைத் தலைமுறை தலைமுறையாக என் வாயினால் அறிவிப்பேன்.
Join our WhatsApp Channel
Most Read
● ஒரு நேர்முகசந்திப்பின் சாத்தியம்● சொப்பனத்தில் தேவதூதர்களின் தோற்றம்
● சுய ஏமாற்றுதல் என்றால் என்ன? - I
● மற்றவர்களுக்கான பாதைக்கு வெளிச்சத்தை காண்பித்தல்
● கிறிஸ்துவில் ராஜாக்களும் ஆசாரியர்களுமாம்
● மலைகலும் பள்ளத்தாக்குகளின் தேவன்
● கடவுளுக்கு முதலிடம் #3
கருத்துகள்