தினசரி மன்னா
நீங்கள் ஒரு யுத்தத்தில் இருக்கும்போது: நுண்ணறிவு
Thursday, 16th of January 2025
0
0
28
Categories :
கவனச்சிதறல் (Distraction)
தாவிது யுத்தக்களத்திற்கு வந்திருந்தார், அவருடைய சொந்த விருப்பத்தின் பேரில் அல்ல, ஆனால் அவரது தந்தை அவரை ஒரு வேலை செய்யச் சொன்னதால் வந்திருந்தார். யுத்தத்தின் முன் வரிசையில் இருந்த தனது சகோதரர்களுக்கு சில பொருட்களை எடுத்துச் செல்ல அவரது தந்தை கொடுத்து அனுப்பினார். (1 சாமுவேல் 17:17-18 வாசியுங்கள்)
பெலிஸ்தியனாகிய கோலியாத் எப்படி இஸ்ரவேலை கேலி செய்கிறான் என்பதை தாவீது நேரில் கண்டார். அவருக்குள் உள்ள அவரது ஆவி தூண்டப்பட்டது, மேலும் கோலியாத்துடன் சண்டையிடும் வெகுமதி என்ன என்று அவரைச் சுற்றியுள்ளவர்களிடம் கேட்டார். உடனே அந்த மனிதர்கள் அவருக்குப் பதிலளித்தார்கள்: “அந்நேரத்திலே இஸ்ரவேலர்: வந்து நிற்கிற அந்த மனுஷனைக் கண்டீர்களா, இஸ்ரவேலை நிந்திக்க வந்து நிற்கிறான்; இவனைக் கொல்லுகிறவன் எவனோ, அவனை ராஜா மிகவும் ஐசுவரியவானாக்கி, அவனுக்குத் தம்முடைய குமாரத்தியைத் தந்து, அவன் தகப்பன் வீட்டாருக்கு இஸ்ரவேலிலே சர்வமானியம் கொடுப்பார் என்றார்கள்.”(1 சாமுவேல் 17:25)
“அதற்கு ஜனங்கள்: அவனைக் கொல்லுகிறவனுக்கு இன்ன இன்னபடி செய்யப்படும் என்று முன் சொன்ன வார்த்தைகளையே அவனுக்குச் சொன்னார்கள். அந்த மனுஷரோடே அவன் பேசிக்கொண்டிருக்கிறதை அவன் மூத்த சகோதரனாகிய எலியாப் கேட்டபோது, அவன் தாவீதின்மேல் கோபங்கொண்டு: நீ இங்கே வந்தது என்ன? வனாந்தரத்திலுள்ள அந்தக் கொஞ்ச ஆடுகளை நீ யார் வசத்தில் விட்டாய்? யுத்தத்தைப் பார்க்க அல்லவா வந்தாய்? உன் துணிகரத்தையும், உன் இருதயத்தின் அகங்காரத்தையும் நான் அறிவேன் என்றான்.”1 சாமுவேல் 17:27-28
தாவீதின் மூத்த சகோதரனான எலியாப், தாவீது அந்த மனிதர்களிடம் பேசுவதைக் கேட்டபோது, எல்லா மனிதர்களுக்கும் முன்பாக அவனைக் கடுமையாகக் கடிந்துகொண்டான். நடந்தவற்றால் தாவிது எளிதில் புண்பட்டு காயப்படுத்தப்பட்டிருக்கலாம், ஆனால் அதற்கு தாவிது இடம் கொடுக்கவில்லை.
இங்கே ஒரு முக்கியமான திறவுகோல் உள்ளது:
தாவிது கவனம் சிதற மறுத்தார்
நீங்கள் ஒரு யுத்தத்தில் இருக்கும்போது, உண்மையான யுத்தத்தில் உங்களை எதிர்த்துப் போராடுவதற்கு எதிரி எப்போதும் உங்கள் மீது கவனச்சிதறல்களை வீசுவான்.
அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதினார், “இதை நான் உங்களைக் கண்ணியில் அகப்படுத்தவேண்டுமென்று சொல்லாமல், உங்களுக்குத் தகுதியாயிருக்குமென்றும், நீங்கள் கவலையில்லாமல் கர்த்தரைப் பற்றிக்கொண்டிருக்கவேண்டுமென்றும், உங்கள் சுயபிரயோஜனத்துக்காகவே சொல்லுகிறேன்.”(1 கொரிந்தியர் 7:35)
கவனச்சிதறல் என்பது தேவனின் நோக்கங்களுக்கும் திட்டங்களுக்கும் முதல் எதிரி. ஜனங்கள் உங்களை புண்படுத்தும் போது, உங்களை காயப்படுத்தினால், உண்மையில்லாத விஷயங்களைச் சொன்னால், நம்மை நாமே தற்காத்துக் கொள்வதற்காக சமூக ஊடகங்களில் அல்லது வேறு சில தளங்களில் அவர்களை எதிர்த்துப் போராட முனைகிறோம். நீங்கள் தேவனால் அழைக்கப்பட்ட உண்மையான விஷயத்திலிருந்து உங்களைத் தடுக்க இது ஒரு கவனச்சிதறல் அன்றி வேறில்லை.
கடந்த காலத்தில், தாவிது ஒரு சிங்கம் மற்றும் ஒரு கரடியைக் கொன்றார், மேலும் அவர் எலியாப்பை எளிதில் சமாளிக்க முடியும், ஆனால் அவர் தனது சொந்த சகோதரனுடன் சண்டையிடுவதைத் தவிர்த்தார். அவர் எலியாபுடன் சண்டையிட்டிருந்தால், கோலியாத்துடனான சந்திப்பை அவர் தவறவிட்டிருக்கலாம். தாவீது கோலியாத்துடனான தனது போரைத் தவறவிட்டிருந்தால், அவர் இஸ்ரேலில் ஒருபோதும் அறியப்பட்டிருக்க மாட்டார்.
Bible Reading : Genesis 45 - 46
ஜெபம்
தந்தையே, இயேசுவின் நாமத்தில், நீர் என்னை என்ன செய்ய அழைத்தீர் என்பதில் என் கண்களை ஒருமுகப்படுத்த எனக்கு உதவும். எனக்கு எதிரான கவனத்தை சிதறடிக்கும் ஒவ்வொரு வல்லமையையும் இயேசுவின் நாமத்தில் துண்டிக்கப்படும். ஆமென்!
Join our WhatsApp Channel
Most Read
● தவறான சிந்தனை● ஆராதனையை ஒரு வாழ்க்கை முறையாக்குதல்
● விசுவாசத்தை முடத்தனத்திலிருந்து வேறுபடுத்துதல்
● நாள் 36 : 40 நாட்கள் உபவாசம் மற்றும் ஜெபம்
● நிலைத்தன்மையின் வல்லமை
● நீங்கள் உண்மையாய ஆராதிப்பவரா
● சூழல்கள் பற்றிய முக்கிய நுண்ணறிவு - 2
கருத்துகள்