english हिंदी मराठी తెలుగు മലയാളം ಕನ್ನಡ Contact us எங்களை தொடர்பு கொள்ள Spotify இல் கேளுங்கள் Spotify இல் கேளுங்கள் Download on the App StoreiOS பயன்பாட்டைப் பதிவிறக்கவும் Get it on Google Play Android பயன்பாட்டைப் பதிவிறக்கவும்
 
உள்நுழைய
ஆன்லைனில் வழங்குதல்
உள்நுழைய
  • வீடு
  • நிகழ்வுகள்
  • வாழ்க
  • டி.வி
  • நோஹ்டியூப்
  • பாராட்டுக்கள்
  • செய்தி
  • மன்னா
  • பிரார்த்தனைகள்
  • வாக்குமூலங்கள்
  • கனவுகள்
  • மின் புத்தகங்கள்
  • வர்ணனை
  • இரங்கல் குறிப்புகள்
  • சோலை
  1. வீடு
  2. தினசரி மன்னா
  3. உங்கள் இல்லத்தின் சூழலை மாற்றுதல் - 1
தினசரி மன்னா

உங்கள் இல்லத்தின் சூழலை மாற்றுதல் - 1

Sunday, 23rd of March 2025
0 0 99
Categories : விடுதலை (Deliverance)
“கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றார்.” ‭‭ஆதியாகமம்‬ ‭18‬:‭19‬ ‭‬‬‬‬‬‬‬‬‬‬

குடும்பம் என்பது சமுதாயத்தின் அடித்தளம். எந்தவொரு துடிப்பான சமூகமும் துடிப்பான குடும்பங்களின் பெரிய தொகுப்பைக் கொண்டிருக்க வேண்டும். எந்த ஆலயத்திலும் அல்லது சமூகத்திலும் தேவன் கிரியை செய்வதற்கு குடும்பம் முக்கியமானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது உண்மை, ஏனென்றால் தேவன் பயன்படுத்தும் எவரும் ஒரு குடும்பத்திலிருந்து வர வேண்டும். மனித குலத்தைக் காப்பாற்ற வந்த இயேசுவும் பூமியில் இறங்கி அனாதையாக அலையவில்லை; அவர் ஒரு குடும்பத்திலிருந்து வந்தவர்.

ஜனங்கள் இயேசுவைப் பார்த்து வியந்து சொன்னார்கள், மத்தேயு 13:55-56-ல் என்று வேதம் சொல்கிறது, “இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு, யோசே, சீமோன், யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர் அல்லவா? இவன் சகோதரிகளெல்லாரும் நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? அவர்கள் இயேசுவை ஒரு குடும்பத்தில் கண்டறிந்தார்கள்.
‭‭‬‬‬‬

அதேபோல், தங்கள் தலைமுறையில் முக்கியமான எந்த ஒரு நபரும் ஒரு குடும்பத்தில் இருந்து தான் வருவார். ஒவ்வொரு வீட்டின் தலைவர்களும் இந்த உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டிய பொறுப்பை இது சுமத்துகிறது. பிற்காலத்தில் சமுதாயத்திற்கு அச்சுறுத்தலாக மாறும் பெரும்பாலான குழந்தைகள் செயலிழந்த குடும்பங்களிலிருந்து இருந்து வருகிறார்கள். நிம்மதியாக வாழ்வது என்றால் என்னவென்று பலருக்குத் தெரியாது, அப்படியிருக்க சமூகத்தில் அமைதியை எப்படி அனுமதிப்பது? மகிழ்ச்சியாக வாழ்வது என்றால் என்னவென்று அவர்களுக்குத் தெரியாது, அப்படியானால் அவர்களால் எப்படி சமுதாயத்தை மகிழ்ச்சியாக மாற்ற முடியும்?

அடுத்த சில தினங்களில் , உங்கள் குடும்பத்தை சமாதானமும்  மகிழ்ச்சியின் இருப்பிடமாக மாற்ற உதவும் நான்கு வழிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள  போகிறேன். உங்கள் குடும்பத்தில் சமாதானம்  இருந்தால், அது உங்கள் குடும்பத்தில் தேவன்  குடியிருக்கிறார் என்பதற்கான அடையாளம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உங்கள் குடும்பத்தில் எல்லைகளை அமைத்தல்

குழந்தைகள் எப்போதும் தங்கள் விருப்பப்படி செய்ய விரும்புகிறார்கள். ஒவ்வொருவரும் தங்கள் விருப்பப்படி செய்ய விரும்புகிறார்கள். எதைச் செய்ய வேண்டும் அல்லது எப்படிச் செய்ய வேண்டும் என்று கூறுவதை யாரும் விரும்புவதில்லை. ஆனால் எந்தவொரு குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் சமாதானத்துடன் செயல்படுவதற்கும் முன்னேறுவதற்கும் எல்லைகள் இன்றியமையாதவை. நமது நெடுஞ்சாலையில் போக்குவரத்து விதிகள் இல்லை என்று கற்பனை செய்து பாருங்கள்; நிச்சயமாக, விபத்துகளின் விகிதம் அதிவேகமாக அதிகரிக்கும்.

அதேபோல், எல்லைகள் இல்லாத எந்த குடும்பத்திலும் எப்போதும் குழப்பம் இருக்கும்.
எல்லைகள் என்பது அனுமதிக்கப்பட்டவை மற்றும் அனுமதிக்கப்படாதவை என்பதைக் குறிக்கும் வரம்புகளின் தொகுப்பாகும். சில நடைமுறைக் கண்ணோட்டத்திலிருந்தும் மற்றவை உடல்நலக் காரணங்களுக்காகவும் அமைக்கப்பட்டுள்ளன. சில சமயங்களில், உங்கள் குடும்பத்தில் இளம்வயதினர் இருக்கும் போது,  சமரசம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு, கண்டிப்பான அன்பு அவசியம்.

உதாரணமாக, புகைபிடிப்பதை நம் குடும்பங்களில் அனுமதிக்கக்கூடாது. எங்கள் குடும்பத்தில் மதுவையோ அல்லது பிறந்தநாள் போன்ற நமது கொண்டாட்டங்களையோ அனுமதிக்க மாட்டோம். இவை நாம் வகுத்த எல்லைகள், அவை உடைக்கப்பட்டால், அவை நம் விருப்பத்திற்கு மாறாகவும் நம்மை அறியாமலும் உடைக்கப்படுகின்றன. எனவே, உங்கள் வசிப்பிடத்திற்குள் தேவையற்ற குப்பைகள் நுழைவதைத் தடுக்க நீங்கள் ஒப்புக்கொண்டு எல்லைகளை அமைக்க வேண்டும்.

இன்றைய வசனத்தை நீங்கள் கவனமாகப் படித்தால், இது ஆபிரகாமைப் பற்றிய தேவனின் சாட்சியாக இருக்கிறது; ஆபிரகாம் தனது குடும்பத்தில் எல்லைகளை அமைப்பார் என்று தேவனை நம்பினார். எவரும் விரும்பியபடி செய்ய  துணிய மாட்டார்கள் ஆனால் எதிர்பார்த்தபடி செய்வார் என்று உறுதியாக இருந்தார். வேதம் அவருடைய குடும்பத்தில் எந்தவிதமான வெறுப்பையும், அமைதியின்மையையும் பதிவு செய்யவில்லை என்பதில் ஆச்சரியமில்லை. அவருடைய குடும்பத்தில் சுமார் முந்நூறு பயிற்சி பெற்ற வீரர்கள் இருந்தார்கள், ஆனாலும், எல்லோரும் சரியானதைச் செய்தார்கள். இதுவே சமாதானத்திற்கும்   மகிழ்ச்சிக்கும் அடித்தளம்.

பெற்றோராக, உங்கள் குடும்பங்களில் நடக்கும் சம்பவங்களில் உங்களை தொலைத்து விடாதீர்கள்.   தேவனுடைய வார்த்தை உங்கள் குடும்பக் காரியங்களை ஆளட்டும். ஆசாரியனாகிய  ஏலி தனது குடும்பத்தில் எல்லைகளை அமைக்கவில்லை, இறுதியில் அவர் தனது பிள்ளைகளையும் தனது ஊழியத்தையும் இழந்தார். எனவே, உங்கள் குடும்பங்களில் வேத வரம்புகளை ஏற்படுத்துங்கள், தேவனுடைய சமாதானம் உங்களை ஆளுகை செய்யட்டும்.

Bible Reading: Judges 4-5
ஜெபம்
பிதாவே , இயேசுவின் நாமத்தில், எங்களுக்கு ஒரு குடும்பத்தை  கொடுத்ததற்கு நன்றி. எங்கள் குடும்பத்தில் உமது சமாதானத்தை நிலைநிறுத்துவதற்கு என்ன எல்லைகளை அமைக்க வேண்டும் என்பதை அறிகின்ற ஞானத்திற்காக நான் ஜெபிக்கிறேன். உமது சமாதானம்  எங்கள் குடும்பங்களில் நிலைத்திருக்கவும், நீர் எப்போதும் எங்களுடன் நிலைத்திருக்கவும் நான் ஜெபிக்கிறேன். இயேசுவின் நாமத்தில். ஆமென்!

Join our WhatsApp Channel


Most Read
● இழந்த ரகசியம்
● நாள் 01:40 நாட்கள் உபவாச ஜெபம்
● ஒரு நேர்முகசந்திப்பின் சாத்தியம்
● சமாதானம் உங்களை எப்படி மாற்றும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்
● மறுரூபத்திற்கான சாத்தியம்
● யுத்தத்தை நடத்துங்கள்
● கடனில் இருந்து வெளியேறவும்: Key # 2
கருத்துகள்
எங்களை தொடர்பு கொள்ள
தொலைபேசி: +91 8356956746
+91 9137395828
பகிரி: +91 8356956746
மின்னஞ்சல்: [email protected]
முகவரி :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
பயன்பாட்டைப் பெறவும்
Download on the App Store
Get it on Google Play
அஞ்சல் பட்டியலில் சேரவும்
ஆராயுங்கள்
நிகழ்வுகள்
வாழ்க
நோஹ்டியூப்
டி.வி
தானம்
மன்னா
பாராட்டுக்கள்
வாக்குமூலங்கள்
கனவுகள்
தொடர்பு கொள்ளவும்
© 2025 Karuna Sadan, India.
➤
உள்நுழைய
இந்த தளத்தில் உள்ள உள்ளடக்கத்தை கருத்து தெரிவிக்கவும் விரும்பவும் உங்கள் NOAH கணக்கில் உள்நுழையவும்.
உள்நுழைய