இத்தனை ஆண்டுகளாக, நான் கற்றுக்கொண்ட ஒரு கொள்கை என்று இருந்தால்: "நீங்கள் உண்மையிலேயே மதிக்கிறதை மட்டுமே நீங்கள் ஈர்ப்பீர்கள், நீங்கள் அவமரியாதை செய்வதை விரட்டுவீர்கள்." நீதிக்கு இடைவிடாது போராடும் நபர்கள் பணத்தை போதுமான அளவு மதிக்க மாட்டார்கள், கண்டுக்கொள்ளவும் மாட்டார்கள் என்பது கவனிக்கத்தக்கது, மேலும் இந்த அணுகுமுறை பெரும்பாலும் அவர்கள் பணத்தை கையாளும் விதத்தில் பிரதிபலிக்கிறது. 'மதிப்பு' மற்றும் 'மரியாதை' ஆகியவை தேவனுக்கு மட்டுமே உரித்தான ஆராதனையிலிருந்து வேறுபட்டவை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் (யாத்திராகமம் 20:2-3).
மரியாதை மற்றும் மதிப்பு ஏன் முக்கியம்?
மரியாதையும் மதிப்பும் முக்கியமானது, ஏனென்றால் அவை தெய்வீக ஒழுங்கைக் கொண்டுவருகின்றன. மரியாதையும் மதிப்பும் இருக்கும் இடத்தில் சச்சரவுகளுக்கும் குழப்பங்களுக்கும் இடமில்லை. "“தேவன் கலகத்திற்குத் தேவனாயிராமல், சமாதானத்திற்குத் தேவனாயிருக்கிறார்" (1 கொரிந்தியர் 14:33). S.சமாதானமும் ஒழுக்கமும் இல்லாத ஒருவரின் வாழ்க்கையில், திருமணம், முன்னேற்றம், பணம் ஆகியவற்றில் மட்டுப்படுத்தப்படலாம். இன்று நாம் மதிக்கும் மற்றும் கனப்படுத்தும் பெரும்பாலானவை காலப்போக்கில் கற்றுக் கொள்ளப்படுகின்றன, பெரும்பாலும் குழந்தை பருவத்தில் அல்லது இளமைப் பருவத்தில் தொடங்குகின்றன. இருப்பினும், பொய்களின் பிதாவான பிசாசானவன், இன்று பெரியவர்களாகிய நம்மையும் மக்களை மதிக்கவும், எப்படி கனப்படுத்துவது என்பதில், அவனுடைய செல்வாக்கை பயன்படுத்தி தவறான நம்பிக்கைகளால் நம்மை போஷிக்கலாம் என்பது கவனிக்கத்தக்கது.
உதாரணமாக, பணம் தீயது அல்லது செல்வம் உயருவதற்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது என்று கற்பிக்கப்பட்டால், நமது பணத்தை மதிப்பிடுவதற்கும் நிர்வகிப்பதற்கும் நாம் போராடலாம். இருப்பினும், செல்வமும் உடைமைகளும் தேவனின் ஈவு என்று வேதம் நமக்குக் கற்பிக்கிறது, அவற்றை கனத்தோடு நிர்வகிப்பது நமது பொறுப்பு (நீதிமொழிகள் 10:22, லூக்கா 12:48).
உங்கள் அமைப்பை எவ்வாறு மாற்றுவது?
உங்கள் மதிப்பு முறையை மாற்ற விரும்பினால், பழைய ஏற்பாட்டில் தாவீது ராஜாவின் ஆலோசனை உதவியாக இருக்கும். தேவனுடைய வார்த்தையை தியானிக்க அவர் பரிந்துரைக்கிறார். சங்கீதம் 1:1-3ல் வேதம் நமக்கு அறிவுறுத்துகிறது, “துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.”
தியானிப்பது என்பது தேவன் தம்முடைய வார்த்தையின் மூலம் எதைப் பேசுகிறார் என்பதைப் பற்றி ஆழமாகச் சிந்திப்பதும், யோசிப்பதும், புரிந்துகொள்ள முயற்சிப்பதும் ஆகும். இந்த போதனைகள் நம் அன்றாட வாழ்வில் எவ்வாறு பொருந்துகின்றன என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும், மேலும் இந்த நேர்மறையான குணங்களை நம் ஆளுமைகளில் எவ்வாறு ஒருங்கிணைக்க முடியும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
பிலிப்பியர் 4:8ல், உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள் என்று அப்போஸ்தலனாகிய பவுல் வலியுறுத்துகிறார். இந்தப் பழக்கம் நமது சிந்தனையை மாற்றியமைத்து, தேவன் எதை மதிக்கிறாறோ, அதை மதிக்கும் போது, கனப்படுத்தும் போது நம் மனதைப் புதுப்பிக்க முடியும். நீங்கள் எதை மதிக்கிறீர்களோ, அதை நீங்கள் ஈர்ப்பீர்கள், நீங்கள் மதிக்காததை நீங்கள் விரட்டுவீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஜெபம்
அன்புள்ள பரலோகத் தகப்பனே, இன்று நான் தாழ்மையான இருதயத்துடன் உம் முன் வருகிறேன். எனது மதிப்பின் அமைப்பு உம் விருப்பத்துடன் சீரமைக்கப்பட வேண்டுகிறேன். உமது வார்த்தையை தியானிக்கவும், உமது போதனைகளை சிந்திக்கவும், யோசிக்கவும், அவற்றை என் அன்றாட வாழ்வில் ஒருங்கிணைக்கவும் எனக்கு அருள் செய்யும். இயேசுவின் நாமத்தில், ஆமென்!
Join our WhatsApp Channel
Most Read
● தெய்வீகப் பழக்கம்● தேவனின் வார்த்தையை மாற்ற வேண்டாம்
● என் விளக்கை ஏற்றும் ஆண்டவரே
● இரகசியத்தைத் தழுவுதல்
● ஆயத்தமில்லாத உலகில் ஆயத்தநிலை
● நான் கைவிட மாட்டேன்
● அலைவதை நிறுத்துங்கள்
கருத்துகள்