english हिंदी मराठी తెలుగు മലയാളം ಕನ್ನಡ Contact us எங்களை தொடர்பு கொள்ள Spotify இல் கேளுங்கள் Spotify இல் கேளுங்கள் Download on the App StoreiOS பயன்பாட்டைப் பதிவிறக்கவும் Get it on Google Play Android பயன்பாட்டைப் பதிவிறக்கவும்
 
உள்நுழைய
ஆன்லைனில் வழங்குதல்
உள்நுழைய
  • வீடு
  • நிகழ்வுகள்
  • வாழ்க
  • டி.வி
  • நோஹ்டியூப்
  • பாராட்டுக்கள்
  • செய்தி
  • மன்னா
  • பிரார்த்தனைகள்
  • வாக்குமூலங்கள்
  • கனவுகள்
  • மின் புத்தகங்கள்
  • வர்ணனை
  • இரங்கல் குறிப்புகள்
  • சோலை
  1. வீடு
  2. தினசரி மன்னா
  3. அற்புதத்தில் இயங்குவது: திறவுகோல் # 1
தினசரி மன்னா

அற்புதத்தில் இயங்குவது: திறவுகோல் # 1

Wednesday, 19th of June 2024
0 0 752
Categories : அற்புதத்தில் இயங்குவது (Operating in the Miraculous)
வாழ்க்கையில் அடைய வேண்டிய ஒவ்வொரு இலக்கும் அந்த கனவை நிறைவேற்றுவதற்கான ஆயத்தம், திட்டமிடல் மற்றும் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மூலம் தொடங்குகிறது. அதுபோலவே, தேவனின் வல்லமை உங்கள் வழியாகப் பாய வேண்டுமென்றால் அல்லது உங்கள் சார்பாக வேலை செய்ய விரும்பினால், அவருடைய வார்த்தை இதைப் பற்றி என்ன சொல்கிறது என்பதை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

பல ஆண்டுகளாக, ஒரு அற்புதத்திற்கு ஆயத்தமாவதற்கு தேவையான சில படிகள் உள்ளன என்பதையும், ஒரு அற்புதத்தை பெறுவதற்கும் தேவையான படிகள் உள்ளன என்பதையும் நான் புரிந்துகொண்டேன். 

சூரியனுக்குக் கீழே புதிதாக எதுவும் இல்லை. (பிரசங்கி 1:9)

அந்த அற்புதமான அற்புதங்களைச் செய்வதற்கு நம்முடைய சரியான முன்மாதிரியான கர்த்தராகிய இயேசு எடுத்த அதே படிகள் இவை. அப்போஸ்தலர்கள் எடுக்க வேண்டிய அதே படிகள் இவைதான், அற்புதத்தில் செயல்படுவதற்கும், ஒரே அற்புதச் செயலாளரிடமிருந்து அற்புதங்களைப் பெறுவதற்கும் உங்களைத் ஆயத்தப்படுத்துவதற்கு நீங்களும் நானும் எடுக்க வேண்டிய அதே படிகள்தான் இவை.

கடவுள் கொடுத்த நமது அதிகாரத்தைப் புரிந்துகொள்வதும் பயன்படுத்துவதும் உங்கள் வாழ்வில் நடக்கும் அற்புதங்களைப் பார்ப்பதற்கு முக்கியமாகும்.

அப்போஸ்தலர்களான பேதுருவும் யோவானும் ஒரு நாள் மதியம் தேவஆலயத்திற்கு சென்று ஜெபத்தில் கலந்து கொண்டனர். அவர்கள் ஆலயத்திற்கு சென்றபோது, ​​பிறவியிலேயே முடமான ஒருவனை தூக்கிக்கொண்டு வந்தார்கள். ஒவ்வொரு நாளும் அவன் ஆலயத்தில் போகிறவர்களிடம் பிச்சை எடுப்பதற்காக அலங்கார வாசல் என்று அழைக்கப்படும் ஆலய வாயிலுக்குப் பக்கத்தில் வைக்கப்பட்டான். பேதுருவும் யோவானும் உள்ளே நுழைவதைக் கண்டு அவர்களிடம் கொஞ்சம் பணம் கேட்டாரன்.

பேதுருவும் யோவானும் அவனை கூர்ந்து பார்த்தார்கள், பேதுரு, “எங்களைப் பார்!” என்றார். முடவன் கொஞ்சம் பணத்தை எதிர்பார்த்து அவர்களை ஆவலுடன் பார்த்தான். ஆனால் பேதுரு, “உனக்காக என்னிடம் வெள்ளியும் பொன்னும் இல்லை. ஆனால் எங்களிடம் இருப்பதை நான் தருகிறேன். நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், எழுந்து நட!”

அப்பொழுது பேதுரு அந்த முடவனை வலது கையைப் பிடித்து எழுப்ப உதவினார். அவர் செய்தது போலவே, அந்த மனிதனின் கால்களும் கணுக்கால்களும் உடனடியாக குணமடைந்து பலப்படுத்தப்பட்டன. அவன் குதித்து, காலில் நின்று, நடக்க ஆரம்பித்தான்! பிறகு, நடந்தும், குதித்தும், தேவனை துதித்தும் அவர்களுடன் ஆலயத்திற்கு சென்றான். (அப்போஸ்தலர் 3:1-8 NLT)

பேதுரு இந்த மனிதனுக்காக ஜெபிக்கவில்லை என்பதைக் கவனியுங்கள். பேதுரு சிலுவையின் முடிக்கப்பட்ட வேலையின் வெளிப்பாட்டில் இயங்கிக் கொண்டிருந்தார். கர்த்தர் ஏற்கனவே சிலுவையில் தம்முடைய பங்கைச் செய்துவிட்டார் என்றும் அந்தச் வல்லமையை தனக்குள் வைத்திருக்கிறார் என்றும் அவர் உறுதியாக நம்பினார். இப்போது அந்த வல்லமையை விடுவிப்பது பேதுருவின் பொறுப்பாக இருந்தது, அதைத்தான் அவர் செய்தார்.

மெலிந்த போலீஸ் அதிகாரி கூட ஒரு பெரிய டிரக்கின் முன் கையை உயர்த்தி நின்று, “நிறுத்துங்கள்! என்று சொல்லுன்போத,  அந்த பெரிய லாரியை நிற்க வேண்டும். போலீஸ்காரர் தனது சொந்த சரிர பெலத்தால் அந்த லாரியை நிறுத்தினாரா? இல்லை! அவர் அதை அதிகாரத்துடன் செய்தார் - நாட்டின் சட்டம்.

மனிதர்களாகிய நாம் சக மனிதர்களுக்கு வழங்கும் இந்த வகையான அதிகாரம் இயற்கை அதிகாரம் என்று அழைக்கப்படுகிறது. தேவன் தன் சீடர்களுக்கு (உங்களுக்கும் எனக்கும்) கொடுத்த அதிகாரம் ஆவிக்குரிய அதிகாரம் எனப்படும். இயற்கை மற்றும் ஆவிக்குரிய அதிகாரம் ஆகிய இரண்டின் கொள்கையும் அப்படியே உள்ளது - யாரோ ஒருவர் அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும்.

”அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷரையும் வரவழைத்து, சகல பிசாசுகளையும் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும், அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து, தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவும், பிணியாளிகளைச் சொஸ்தமாக்கவும் அவர்களை அனுப்பினார்.“
‭‭லூக்கா‬ ‭9‬:‭1‬-‭2‬ ‭

கவனிக்கவும், கர்த்தராகிய இயேசு தம்முடைய அதிகாரத்தையும் வல்லமையையும் சீஷர்களுக்குக் கொடுத்தார். சீஷன் என்றால் யார்? ஒரு சீஷன் வெறுமனே தன் குருவின் அனைத்து போதனைகளையும் பின்பற்றுபவன். எனவே, இந்த அதிகாரத்தைப் பெற, நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சீடராக இருக்க வேண்டும்.

"பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்" என்று வேதம் கூறுவதற்கு இதுவே காரணம். நீங்கள் பிசாசை விட சரிர ரீதியாக வலிமையானவன் என்பதால் அல்ல, ஆனால் அவருடைய வார்த்தை இப்போது உங்களுக்குள் நிறைந்திருக்கிறது. (கொலோசெயர் 3:16)

யோவான் 8:31-ன் படி, ”இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்;“ என்று கூறினார். இந்த அதிகாரமும் வல்லமையும் மூலப் பன்னிருவருக்கு மட்டுமல்ல, அவரை நம்பி அவருடைய வார்த்தையில் நடப்பவர்களுக்கும் இருந்தது என்பதை இந்த வேதம் தெளிவாகக் கூறுகிறது.

இன்று, ஒரு தேர்வு செய்யுங்கள்; நான் தேவனுடைய வார்த்தையைப் படித்து தியானிக்கப் போகிறேன். என்ன இருந்தாலும் அதை நடைமுறைப்படுத்தப் போகிறேன். நீங்கள் இதைச் செய்யும்போது, ​​நீங்கள் தேவனின் அதிகாரத்தில் வளர்வதைக் காண்பீர்கள்.
ஜெபம்
இயேசுவின் நாமத்தில், எனக்கும் என் குடும்பத்திற்கும் எதிரான இருளின் வல்லமைகளை நான் எதிர்த்து கட்டளையிடுகிறேன். (நீங்கள் விடுதலையை உணரும் வரை இதைச் சொல்லிக்கொண்டே இருங்கள்.)


Join our WhatsApp Channel


Most Read
● மன்றாட்டு ஜெபத்தின் முக்கியத்துவம்
● முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே
● யாருக்கும் எதிர்ப்பு சக்தி இல்லை
● உங்கள் விடுதலையை இனி நிறுத்த முடியாது
● சரியான உறவுகளை எவ்வாறு உருவாக்குவது உறவுகள்
● காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்
● உங்கள் சொந்த கால்களைத் தாக்காதீர்கள்
கருத்துகள்
எங்களை தொடர்பு கொள்ள
தொலைபேசி: +91 8356956746
+91 9137395828
பகிரி: +91 8356956746
மின்னஞ்சல்: [email protected]
முகவரி :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
பயன்பாட்டைப் பெறவும்
Download on the App Store
Get it on Google Play
அஞ்சல் பட்டியலில் சேரவும்
ஆராயுங்கள்
நிகழ்வுகள்
வாழ்க
நோஹ்டியூப்
டி.வி
தானம்
மன்னா
பாராட்டுக்கள்
வாக்குமூலங்கள்
கனவுகள்
தொடர்பு கொள்ளவும்
© 2025 Karuna Sadan, India.
➤
உள்நுழைய
இந்த தளத்தில் உள்ள உள்ளடக்கத்தை கருத்து தெரிவிக்கவும் விரும்பவும் உங்கள் NOAH கணக்கில் உள்நுழையவும்.
உள்நுழைய