Daily Manna
0
0
225
ஒரே ஒரு பிரதான திறவுகோல்
Thursday, 7th of November 2024
Categories :
ஒழுக்கம் (Discipline)
சிறந்தவர்களும் திறமைசாலிகளும் கூட தோல்வியடைவார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா, அதேசமயம் உங்களைப் போன்ற எளியவர்களான நீங்களும் நானும் தேவன் நமக்காகத் திட்டமிட்டுள்ள எல்லாவற்றிலும் பிரவேசிக்க முடியும். இது உண்மை, அதின் ரகசியம் நிலைத்தன்மை.
#1: நிலைத்தன்மை உங்கள் விசுவாசத்தை நிரூபிக்கிறது
நீங்கள் காலையில் எழுந்ததும், ஜெபம் செய்வதும், வேதத்தை தினமும் படிப்பதும், உங்களுக்கு விருப்பமில்லாத போதும், சூழ்நிலைகள் சாதகமாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும், உங்களுக்கு விசுவாசம் இருக்கிறது என்பதை நிரூபிக்கிறது. நீங்கள் சூழ்நிலைகள் அல்லது உணர்வுகளுக்கு அடிபணியவில்லை. நீங்கள் ஒரு திருப்புமுனையைக் காண வேண்டுமானால், நிலைத்தன்மை மிக முக்கியமானது.
“நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.”
கலாத்தியர் 6:9
#2: நீங்கள் அடைந்ததை நிலைத்தன்மை பராமரிக்கிறது
நீங்கள் எதை அடைகிறீர்களோ, அதை நீங்கள் பராமரிக்க வேண்டும். அது அபிஷேகம், தொழில் அல்லது உறவுகள்; நிலைத்தன்மை என்பது நீங்கள் அடைந்திருக்கும் நிலையைப் பராமரிக்க உதவும் முக்கியப் பொருளாகும்.
“ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிறபிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக.”
1 கொரிந்தியர் 15:58
புதிய விஷயங்கள் நம்மை உற்சாகப்படுத்துகின்றன, ஆனால் நாம் போதுமான அளவு கவனமாக இல்லாவிட்டால் புதிய விஷயங்களும் நம் கவனத்தை இழக்க நேரிடும். முக்கியமானது என்னவென்றால், உற்சாகமானதைத் தேர்ந்தெடுப்பதை விட சீரானதாக இருக்க நீங்கள் தேர்வு செய்யும் போது உங்கள் வேர்கள் ஆழமாக வளரும்.
#3: நிலைத்தன்மை பலனைத் தருகிறது
“துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.”
சங்கீதம் 1:1-3
வேதம் ஆசீர்வதிக்கப்பட்ட மனிதனைப் பற்றி பேசுகிறது. "கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிறான்" என்ற சொற்றொடரைக் கவனியுங்கள் - அதுதான் நிலைத்தன்மை.
சீரான வாழ்க்கை அதன் பருவத்தில் பலனைத் தரும்.
இந்த வகையான ஆவிக்குரிய ஒழுக்கத்தின் பக்க பலன்களில் ஒன்று, அது வாழ்க்கையின் மற்ற பகுதிகளிலும் செயல்படும்.
“நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரணகிரியை செய்யக்கடவது.”
யாக்கோபு 1:4
Prayer
என் முன்னேற்றத்தைத் தடுக்கும் ஒவ்வொரு வல்லமையையும் இயேசுவின் நாமத்தில் துண்டிக்கப்படும். (இதைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருங்கள்)
Join our WhatsApp Channel

Most Read
● தேவனைச் சேவிப்பது என்றால் என்ன - II● தீர்க்கதரிசன பாடல்
● தெளிந்த புத்தி ஒரு ஈவு
● நடவடிக்கை எடு
● நமது ஆவிக்குரிய வாளை காத்தல்
● விதை பற்றிய திடுக்கிடும் உண்மை
● ஆவிக்குரிய பிரமாணம் : ஐக்கியத்தின் பிரமாணம்
Comments